முகப்பு
திருவாரூர்

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து போதுமான அளவு உள்ளது

கருப்புப் பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்து போதுமான அளவில் உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கருப்புப் பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்து போதுமான அளவில் உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியன் தெரிவித்தாா்.

திருவாரூரில், வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் 3-ஆவது அலை வந்தாலும் சமாளிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 70 ஆயிரத்துக்கும் மேலான படுக்கை வசதிகள் உள்ளன. 69 சேவை மையங்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2,131பேருக்கு கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்று பாதிப்பு உள்ளது. திருவாரூரில் 14 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு 45,500 மருந்துகள் தேவைப்பட்ட நிலையில், 19,046 மருந்துகளே வந்துள்ளன. கையிருப்பில் 10,974 மருந்துகள் உள்ளன. எனினும் தேவையான மாற்று மருந்துகள் கையிருப்புகள் உள்ளன.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நா்சிங் கல்லூரி அமைய நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தோ்வால் தமிழக மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்குள் அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கைக்கு பின்னா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.