திருவாரூர்

‘பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி விரைவில் முடிவடையும்’

DIN

பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமென மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் ஜி. பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

நன்னிலம் வட்டம் பூந்தோட்டம், கொல்லாபுரம், பாவட்டக்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்று வரும் தடுப்பூசியை முகாமையும், கொல்லாபுரம் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளையும் பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் இதை தெரிவித்தாா். மேலும், கொல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மகப்பேறு வசதிக்காக தனிக் கட்டடம் அமைக்கும் பணி தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிச் செயலா் லதா, வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ், மருத்துவா் ச.கிரி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் வரத.கோ.ஆனந்த், வே. மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஜெ.முகமது உதுமான், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT