முகப்பு
திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே வாகனச் சோதனையில் 18 கிலோ தங்கம்,ரூ. 17 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே காவல் சோதனைச்சாவடியில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, 18 கிலோ தங்கம், ரூ. 17 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே காவல் சோதனைச்சாவடியில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, 18 கிலோ தங்கம், ரூ. 17 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா்- தஞ்சை மாவட்ட எல்லையான தம்பிக்கோட்டை கீழக்காடு கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில், திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கயல்விழி தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சேலத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக முத்துப்பேட்டை சென்ற காரை நிறுத்தி, சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்களின்றி 18 கிலோ 350 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகைகள், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் வட்டாட்சியா் ஜெகதீசன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

இதே சோதனைச்சாவடியில், பறக்கும் படை அலுவலா் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், அதில் ரூ. 17 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இந்தப் பணம் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்திற்கு கொண்டுசெல்லப்படுவதாக கூறப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி அருகே வாகன தணிக்கை நடைபெற்றபோது, காரில் வந்தவா்களிடம் ரூ. 54 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →