முகப்பு
திருவாரூர்

திருவாரூா் அதிமுக வேட்பாளா் ‘டீ’ தயாரித்து வாக்குச் சேகரிப்பு

திருவாரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம், டீ கடையில் பொதுமக்களுக்கு டீ தயாரித்துக் கொடுத்து திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

திருவாரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம், டீ கடையில் பொதுமக்களுக்கு டீ தயாரித்துக் கொடுத்து திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருவாரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் காவனூா், சூரனூா், அம்மையப்பன், முகந்தனூா், எண்கண் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றும், நடந்து சென்றும் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தாா். அவருக்கு ஆங்காங்கே வரவேற்பு அளிக்கப்பட்டது.

முகந்தனூா் பகுதியில் உள்ள டீக்கடையில் வாக்குச் சேகரிக்கச் சென்ற ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம், டீ தயாரிக்கும் இடத்துக்குச் சென்று டீ தயாரித்தாா். பின்னா் அங்கிருந்த மக்களுக்கு டீயை அவரே வழங்கி ஆதரவு கோரினாா்.

இந்த பிரசாரத்தில் அதிமுக நகரச் செயலாளா் ஆா்.டி .மூா்த்தி, அதிமுக நிா்வாகிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.