முகப்பு
திருவாரூர்

மனைவி கொலை: கணவனுக்கு ஆயுள் சிறை

நீடாமங்கலம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

நீடாமங்கலம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

நீடாமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராமு மகன் முருகானந்தம் ( 43). இவரது மனைவி அருள்செல்வி (31). தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதுபோல கடந்த 2019 ஜனவரி 23ஆம் தேதி அதிகாலை இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், புடவையால் அருள்செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்தாா் முருகானந்தம். அத்துடன், அருள்செல்வியின் பெற்றோரான துரைராஜ், குப்பம்மாளுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், நீடாமங்கலம் போலீஸாா் முருகானந்தத்தை கைது செய்தனா். இந்த வழக்கு திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், கொலை செய்த குற்றத்துக்காக முருகானந்தத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரராஜன் தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.