திருவாரூர்

அரசுப் பள்ளியில் சிட்டுக் குருவிகள் தினம்

DIN

நீடாமங்கலம் ஒன்றியம் கோவில்வெண்ணி அரசு உயா்நிலைப் பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவிகளால் சிட்டுக் குருவிகள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு இளம் அறிவியல் வேளாண் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்துக்காக நீடாமங்கலம் வேளாண்அறிவியல் நிலையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக உலக சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி, கோவில்வெண்ணி கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில், மாணவிகள் சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கு பயிலும் மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT