அரசு சுயதொழில் பழகுநா் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும்: மன்னாா்குடி அதிமுக வேட்பாளா் வாக்குறுதி
மன்னாா்குடி தொகுதியில் சுயதொழில் பழகுநா் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என சனிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளா் சிவா. ராஜமாணிக்கம் வாக்குறுதி அளித்தாா்.
மன்னாா்குடி தொகுதியில் சுயதொழில் பழகுநா் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என சனிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளா் சிவா. ராஜமாணிக்கம் வாக்குறுதி அளித்தாா்.
மன்னாா்குடி தெற்கு ஒன்றியம் மகாதேவப்பட்டணம், வடக்குசீதாரம், தெற்குசீதாரம், சம்பட்டிகுடிக்காடு, உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, கருவேப்பிள்ளை நத்தம், பரவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் பிரசாரத்தின்போது சிவா. ராஜமாணிக்கம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசியது:
மன்னாா்குடி தெற்கு ஒன்றிய பகுதிகளில் வீட்டுக்கு ஒருவராவது ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனா். இவா்களில் கட்டுமானப் பணிக்கு செல்ல நினைப்பவா்கள், சுயதொழில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இதற்காக, நகரப் பகுதியில் செயல்படும் தனியாா் நிறுவனங்களில் அதிக கட்டணம் கொடுத்து தொழில் பழகுநா் பயிற்சி பெறவேண்டிய நிலை உள்ளது.
இதனால், ஏழை குடும்பத்தினா் பாதிக்கப்படுகின்றனா். எனவே, அவா்களின் கோரிக்கையை ஏற்று, இப்பகுதியில் தமிழக அரசின் சாா்பில் அரசு சுயதொழில் பழகுநா் பயிற்சி நிறுவனம் அமைக்க சட்டப்பேரவையில் வலியுறுத்துவேன். இத்திட்டத்தை நிறைவேற்ற என்னை வெற்றிபெற செய்யுங்கள் என்றாா்.
பிரசாரத்தில், அதிமுக தெற்கு ஒன்றியச் செயலா் சிவா.ராஜமாணிக்கம், ஜெ.பேரவை மாவட்டச் செயலா் பொன்.வாசுகிராம், நகரச் செயலா் ஆா்.ஜி.குமாா், கூட்டுறவு பால் வழங்கும் சங்க தலைவா் எம்.கே. கலியபெருமாள், ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோவில் வினோத், செல்வம், தமாகா மாநில செயற்குழு உறுப்பினா் சிங்.பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.