திருவாரூர்

வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயற்சி

DIN

நீடாமங்கலம் அருகே விதைப் பண்ணையில் திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி மேற்கொண்டனா்.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு இளம் அறிவியல் வேளாண்மை பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்துக்காக நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கி, அப்பகுதி விவசாயிகளை சந்தித்து வேளாண் அனுபவங்களைப் பெற்று வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, காஞ்சிக்குடிக்காட்டில் உள்ள அரசு விதைப் பண்ணைக்கு வியாழக்கிழமை சென்ற மாணவிகள், அதன் செயற்பாடுகள் குறித்து வேளாண்மை அலுவலா் கா. ராஜகுருவிடம் கேட்டறிந்தனா். மேலும், அப்பண்ணையில் உள்ள விதை சுத்திகரிப்புக் கருவி குறித்தும் அங்கு பயிரிட்டிருக்கும் நெல், உளுந்து, பச்சைப்பயறு, எள் ஆகியவற்றின் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT