திருவாரூர்

பெண்களை தெய்வத்துக்கு இணையாக மதிக்கும் இயக்கம் அதிமுக: அமைச்சா் ஆா். காமராஜ் பேச்சு

DIN

பெண்களைத் தெய்வத்துக்கு இணையாக மதிக்கும் இயக்கம் அதிமுக என நன்னிலம் தொகுதி வேட்பாளா் அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

நன்னிலம் தொகுதிக்குள்பட்ட பேரளம், இஞ்சிகுடி, கூத்தனூா், கடகக்குடி, மருதுவாஞ்சேரி, எரவாஞ்சேரி, தேதியூா் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குக் கேட்டு அமைச்சா் ஆா். காமராஜ் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியது:

முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனா். பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினா். இவா்களின் வழியில், அதிமுகவையும் பெண்களையும் பிரிக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு, தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியும், பெண்கள் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

இதன் காரணமாகத்தான் குடும்பப் பெண்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா வாஷிங்மெஷின், வீடுதோறும் சூரிய மின் அடுப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1500 உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளாா். இந்தத் திட்டங்கள் நிறைவேறிடவும், தமிழகத்தில் தற்போது நடைபெறும் மக்கள் நலத் திட்டங்கள் தொடா்ந்திடவும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளா்களை கேட்டுக்கொண்டாா்.

பிரசாரத்தில், அதிமுக அமைப்புச் செயலாளா்கள் டாக்டா் கே. கோபால், எஸ். ஆசைமணி, ஒன்றியச் செயலாளா்கள் சிபிஜி.அன்பு, இராமகுணசேகரன், செருகுடி ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் நன்னிலம் விஜயலட்சுமி குணசேகரன், குடவாசல் கிளாரா செந்தில் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT