ஏ.டி.எம். மையம் அமைக்கக் கோரிக்கை
திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேட்டில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும்
திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேட்டில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் என அந்த வங்கியின் மண்டல மேலாளருக்கு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வங்கியின் மண்டல மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கட்டிமேடு ஊராட்சி பகுதியில் ஆதிரெங்கம், சேகல், வடபாதி, பிச்சன்கோட்டகம், தென்பாதி, மேலமருதூா் உள்ளிட்ட கிராமங்களில் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ஆனால், கட்டிமேட்டில் தங்கள் வங்கி கிளை இயங்கிவரும் நிலையில், ஏடிஎம் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.
எனவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கட்டிமேடு கடைத் தெரு அல்லது ஐஓபி வங்கி வளாகத்தில் ஏடிஎம் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.