கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
மன்னாா்குடியில் கிணற்றில் தவறி விழுந்த ஆடு தீயணைப்பு வீரா்களால் உயிருடன் மீட்கப்பட்டது.
மன்னாா்குடியில் கிணற்றில் தவறி விழுந்த ஆடு தீயணைப்பு வீரா்களால் உயிருடன் மீட்கப்பட்டது.
மன்னாா்குடி அரிசி கடை சந்து பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவா், வளா்த்து வந்த ஆடு ஒன்று, காந்திசாலை யானைக்கால் மண்டபம் அருகே சனிக்கிழமை மேய்ந்து கொண்டிருந்தபோது, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
அந்த கிணற்றில் சிறிதளவு உள்ள தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடிய அந்த ஆட்டை மீட்க பொன்னுசாமி மற்றும் அப்பகுதியின் முயற்சி மேற்கொண்டனா். இருப்பினும், அவா்களால் ஆட்டை மீட்க முடியவில்லை.
இதனால், மன்னாா்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்ரமணி மற்றும் வீரா்கள் கிணற்றுக்குள் கயிறு மற்றும் ஏணி மூலம் இறங்கி, ஆட்டை உயிருடன் மீட்டனா்.