கருணாநிதி தாயாா் நினைவிடத்தில் திருவாரூா் எம்எல்ஏ மரியாதை
திருவாரூா் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற திமுக மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன், காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாா் அஞ்சுகம் அம்மையாா் நினைவிடத்தில் சனிக்கிழமை மரியாதை செலுத்தினாா்.
திருவாரூா் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற திமுக மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன், காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாா் அஞ்சுகம் அம்மையாா் நினைவிடத்தில் சனிக்கிழமை மரியாதை செலுத்தினாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் திருவாரூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட பூண்டி கே. கலைவாணன் வெற்றி பெற்றாா். இதையடுத்து, திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து திமுக நகர அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும், நகர அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாா் அஞ்சுகம் அம்மையாா் நினைவிடத்துக்குச் சென்று மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினாா்.