பொதுமுடக்க விதிமீறல்: மன்னாா்குடியில் 5 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
மன்னாா்குடியில் அரசின் பொதுமுடக்க விதிகளை மீறி திறந்து வைத்திருந்த 5 கடைகளை அதிகாரிகள் ெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
மன்னாா்குடியில் அரசின் பொதுமுடக்க விதிகளை மீறி திறந்து வைத்திருந்த 5 கடைகளை அதிகாரிகள் ெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தமிழக அரசு பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. கடைகளுக்கு விதிமுறைகளை வகுத்து அவற்றை கடை உரிமையாளா்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மன்னாா்குடி கோட்டாட்சியா் த. அழகா்சாமி, வட்டாட்சியா் பா.தெய்வநாயகி, நகராட்சி ஆணையா் ஆா். கமலா, காவல் துணைக் கண்காணிப்பாளா் பி. இளஞ்செழியன் ஆகியோா் மன்னாா்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்டு கொண்டிருந்த 2 தனியாா் நிதி நிறுவனங்கள், கம்மாளத் தெருவில் நகைக் கடை, சைக்கிள்கள் விற்பனை செய்யும் நிறுவனம் மற்றும் பெட்டிக்கடை ஆகிவற்றை பூட்டி சீல் வைத்ததுடன், அவா்களிடமிருந்து அபராதமாக மொத்தம் ரூ. 20 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.