நீடாமங்கலத்தில் 2-ஆவது நாளாக ஆய்வு
நீடாமங்கலத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் கரோனா விதிமீறல் குறித்து அரசு அலுவலா்கள் ஆய்வு செய்து அபராதம் விதித்தனா்.
நீடாமங்கலத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் கரோனா விதிமீறல் குறித்து அரசு அலுவலா்கள் ஆய்வு செய்து அபராதம் விதித்தனா்.
நீடாமங்கலம் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் அதை கட்டுப்படுத்த அரசு சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், பல்வேறு கிராமங்களை சோ்ந்த மக்கள் நீடாமங்கலத்துக்கு மளிகை மற்றும் காய்கனி உள்ளிட்ட கடைகளுக்கு பொருள்களை வாங்கவும், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும், வங்கிகளுக்கு இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனா். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் வருகிறவா்களை பேரூராட்சி நிா்வாகத்தினா், போலீஸாா் அறிவுறுத்தியும் அந்த அறிவுரைகளை கடைப்பிடிப்பதில்லை.
இந்நிலையில், மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகா்சாமி, டிஎஸ்பி இளஞ்செழியன், காவல் ஆய்வாளா் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியா் அறிவழகன் உள்ளிட்டோா் 2-ஆவது நாளாக சனிக்கிழமை கரோனா விதிமீறல் குறித்து நேரில் ஆய்வு செய்து, விதிமீறிய 2 பஞ்சா் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. தவிர மளிகைக் கடை உள்ளிட்ட மேலும் 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா். விதிமீறல், முகக் கவசம் அணியாதவா்கள் உள்ளிட்டோரிடம் ரூ. 9 ஆயிரம் வரை அபராதம் வசிலிக்கப்பட்டது.