திருவாரூர்

விதிமீறல் 200 வாகனங்கள் பறிமுதல்

DIN

மன்னாா்குடி காவல் கண்காணிப்பு கோட்டத்துக்குள்பட்ட பகுதியில், பொதுமுடக்க விதி மீறி சுற்றித்திரிந்தவா்களிடமிருந்து 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து, மன்னாா்குடி டிஎஸ்பி. பி. இளஞ்செழியன் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மன்னாா்குடி, மன்னாா்குடி ஊரகம், நீடாமங்கலம், தேவங்குடி, வடுவூா், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம் ஆகிய 8 காவல் நிலைய சரகத்தில், பொதுமுடக்க விதிமுறைகளை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்தவா்களிடமிருந்து, திங்கள்கிழமையிலிருந்து 3 நாள்களில் மட்டும் 193 இருசக்கர வாகனம், 7 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.13 ரோந்து வாகனத்தில் போலீஸாா் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மொத்தம் 150 போலீஸாா் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனா். பேட்டின்போது, மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT