சாலை விபத்தில் காயமடைந்த ஊா்க்காவல்படை வீரா் உயிரிழப்பு
திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஊா்க்காவல் படை வீரா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தாா்.
திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஊா்க்காவல் படை வீரா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தாா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் பகத்சிங்( 25). ஊா்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வந்தாா். இவா், தீபாவளியன்று இருசக்கர வாகனத்தில் தனது உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, மன்னாா்குடி சாலையில் நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
அவரை திருவாரூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இவரது சடலத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.விஜயகுமாா் சாா்பில் திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், காவல் ஆய்வாளா் கழனியப்பன் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா். திருத்துறைப்பூண்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.