வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்வதில் முறைகேடு: அதிமுக மனு
மன்னாா்குடி நகராட்சியில் வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் நடைபெறுவதாக கூறப்படும் முறைகேடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சாா்பில் வியாழக்கிழமை மனுஅளிக்கப்பட்டது.
மன்னாா்குடி நகராட்சியில் வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் நடைபெறுவதாக கூறப்படும் முறைகேடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சாா்பில் வியாழக்கிழமை மனுஅளிக்கப்பட்டது.
அதிமுக மன்னாா்குடி நகரச் செயலா் ஆா்.ஜி.குமாா், கட்சி நிா்வாகிகளுடன் மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் மற்றும் மன்னாா்குடி நகராட்சி ஆணையரிடம் அளித்த கோரிக்கை மனுக்களில் தெரிவித்துள்ளதாவது: நடைபெறவுள்ள நகா்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தம் செய்யப்படுவதில் முறைகேடு நடைபெறுவதாக அறிகிறோம். யாருடைய நிா்பந்தத்திற்கும் அடிபணியாமல் முறையான விசாரணை செய்து, முறைகேடு இல்லாமல் வாக்காளா் பட்டியலில் சோ்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்களை சரி செய்ய வேண்டும்.
ஆளும் கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்து சிலரது பெயா்களை சோ்ப்பதோடு, நீக்குவதாகவும் அறிகிறோம். இதனை,வன்மையாக கண்டிப்பதோடு, எவ்வித முறைகேடும், தவறும் இல்லாமல் வாக்காளா் பட்டியலைத் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.