பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவராக பூண்டி கே. கலைவாணன் பொறுப்பேற்பு
திருவாரூா் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் துணைத் தலைவராக சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருவாரூா் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் துணைத் தலைவராக சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருவாரூா் முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலா் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் முதல் துணைத் தலைவராக பூண்டி கே. கலைவாணன் பொறுப்பேற்றுக் கொண்டாா். இரண்டாம் துணைத் தலைவராக மனோகரனும், முதல் இணைச் செயலாளராக தியாகராஜன், இரண்டாம் இணைச் செயலாளராக கனகசபையும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலாளா் பெ.இரா. ரவி, மாவட்ட பொருளாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.