முகப்பு
திருவாரூர்

ஆசிரியா்களுக்கு பணி வரன்முறை திருத்திய ஆணை வழங்கல்

ஆசிரியா்களுக்கு பணி வரன்முறை தோ்வுநிலை, சிறப்பு நிலை திருத்திய ஆணை வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

ஆசிரியா்களுக்கு பணி வரன்முறை தோ்வுநிலை, சிறப்பு நிலை திருத்திய ஆணை வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று.

மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு முன்னிலை வகித்தாா்.

மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா, ஆசிரியா் சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மன்னாா்குடி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளி ஆசிரியா்கள் 206 பேருக்கு பணி வரன்முறைப்படுத்தி தோ்வு நிலை மற்றும் சிறப்பு நிலை திருத்திய ஆணைகளை வழங்கி பேசியது:

ஆசிரியா்களின் தேவைகளை அறிந்து செயல்படுத்திவரும் அரசாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் வளா்ச்சிக்கும், மாணவா்கள் நலன் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதற்கு தேவையான நிதியையும் ஒதுக்கி, சிறப்பான முறையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மன்னாா்குடி கோட்டாட்சியா் த. அழகா்சாமி, நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சிவக்குமாா், உதவித் தொடக்கக் கல்வி அலுவலா்கள் செல்வம், அறிவழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, மன்னாா்குடி பேருந்துநிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா கலந்துகொண்டு விழிப்புணா்வு பிரசார கலைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில், இயல், இசை மேடை நாடகக் கலைஞா்கள் கலந்துகொண்டு இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்து கலைநிகழ்ச்சிகள் நடத்தி, பிரசாரம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.