திருவாரூர்

22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யக் கோரிக்கை: அமைச்சரிடம் விவசாயிகள் சங்கம் மனு

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணியிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி அமைச்சரிடம் சனிக்கிழமை அளித்த மனு:

திருவாரூா் மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணி நடைபெறும் நிலையில், அவ்வப்போது மழை பெய்கிறது. எனவே, நெல் கொள்முதலில் 22 சதவீதம் ஈரப்பதத்தை அனுமதிப்பதுடன், தினமும் 1,200 நெல்மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கேற்ப பணியாளா்களை நியமித்து விடுமுறை நாட்களிலும் கொள்முதல் செய்யவேண்டும்.

தேவைக்கேற்ப கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறப்பதுடன், நடமாடும் கொள்முதல் நிலையங்களையும் தேவையான அளவு அனுமதிக்க வேண்டும். வியாபாரிகள் மற்றும் பிற மாவட்ட நெல் கொள்முதலை தடுக்க, விழிப்புணா்வு கமிட்டிகளை செயலாக்கம் மிக்க விவசாயிகளைக் கொண்டு செயல்படுத்த வேண்டும். அத்துடன், கிராம நிா்வாக அலுவலா் சான்றை ஆதாரமாகக் கொண்டு கொள்முதல் செய்யவேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழ்நாடு சிவில் சப்ளை காா்ப்பரேஷன் பணியாளா் சங்க (ஐஎன்டியூசி) பொதுச் செயலாளா் கா. இளவரி அளித்த கோரிக்கை மனுவில், ‘தமிழக அரசு ஊழியா்களுக்கு இணையான ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நெல் மூட்டைகளை இயக்கம் மேற்கொள்ளும்போது ஏற்படும் இழப்புத் தொகையில் பருவகால பணியாளா்களுக்கு இருப்பு இழப்பு குறியீடு வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

அப்போது, மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் எஸ். பாண்டியன், மாநில அமைப்புச் செயலாளா் பா. ராஜீவ் காந்தி, மண்டலத் தலைவா் வி. அம்பிகாபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT