திருவாரூர்

கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் வித்யாரம்ப வழிபாடுநெல்மணிகளில் எழுதப் பழகிய குழந்தைகள்

DIN

 திருவாரூா் மாவட்டம், கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி சரஸ்வதிபூஜையும், விஜயதசமியையொட்டி, வித்யாரம்பம் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில், திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகேயுள்ள கூத்தனூரில் மட்டுமே சரஸ்வதிக்கு தனி கோயில் உள்ளது. இக்கோயிலில் 9 நாள் நவராத்திரி விழாவையொட்டி, தினமும் சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதோடு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தாா்.

சரஸ்வதி பூஜையையொட்டி அம்மனுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனின் பாத தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. சரஸ்வதி பூஜையையொட்டி, கோயிலுக்கு தங்கள் குழந்தைகளுடன் திரளாக வந்த பொதுமக்கள், நோட்டு, புத்தகம், பேனா, சிலேட்டு போன்ற கல்வி கற்றலுக்கான பொருள்களை அம்மனின் பாதத்தில் வைத்து வழிபட்டனா்.

மேலும், விஜயதசமியான வெள்ளிக்கிழமை தங்கள் குழந்தைகளை சரஸ்வதி கோயிலுக்கு அழைத்துவந்த பெற்றோா், அம்மன் சந்நிதியில் நெல்மணிகளில் தமிழின் முதல் எழுத்தான ‘அ’ -வை எழுத கற்றுக்கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்று, அம்மனைத் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT