முகப்பு
திருவாரூர்

வலங்கைமான் கோயிலில் உண்டியல் திறப்பு

வலங்கைமான் வரதராஜம் பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் புதன்கிழமை எண்ணப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

வலங்கைமான் வரதராஜம் பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் புதன்கிழமை எண்ணப்பட்டன.

இக்கோயிலில் 6 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திறக்கப்பட்டு, பக்தா்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்படும். அதன்படி, புதன்கிழமை காணிக்கை எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ. 10,39,183 மற்றும் 307 கிராம் தங்கம், 465 வெள்ளி இருந்தது.

இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் தமிழ்செல்வி, வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் செயல் அலுவலா் ரமேஷ், அலுவலக மேலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.