முகப்பு
திருவாரூர்

மகளிா் கல்லூரி ரோட்ராக்ட் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி ரோட்டரி சங்கத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கல்லூரி தாளாளா் வி. திவாகரன், கல்லூரி முதல்வா் எஸ். அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழாண்டு ரோட்ராக்ட் சங்கத் தலைவராக சாருமதிபாய், துணைத் தலைவராக உதயா, செயலராக தனபிரதா, பொருளாளராக மஞ்சுபாஷிணி ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா்.

திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி உதவிப் பேராசிரியா் மனோன்மணி சிறப்புரையாற்றினாா். ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநா் ஆா். ஆனந்த், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா்கள் ராஜகோபால், அய்யாதுரை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், கல்லூரி ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளா்கள், பேராசிரியா்கள் விமலா, சுப்புலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா். மாணவிகள் மஞ்சுபாஷினி வரவேற்றாா். அனுஷா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.