திருவாரூர்

என்ஜின் கோளாறு: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

DIN

மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் மின்சாரம் காரணமாக ஏற்பட்ட தடையால் நீடாமங்கலம் ரயில்நிலையம் அருகில் திங்கட்கிழமை அதிகாலையில் அரைமணி நேரம் நின்றது.
 
சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடிக்கு அதிகாலையில் செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் (மின்சார)ரயிலுக்காக திங்கட்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு ரயில்வேகேட் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீடாமங்கலம் வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரயில்ரயில் நிலையத்திற்குள் வராமல் சிக்னல் பாயிண்டில் நின்றது.

பயணிகளுக்காக நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள், ரயில்நிலைய ஊழியர்கள் ரயில் நிலையத்திற்குள் ரயில் வராதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து ரயில்நிலைய ஊழியர்கள் ரயில் நிற்கும் இடத்திற்குச் சென்று பார்த்தனர். மின்சாரம் நின்று வந்ததால் ரயில் என்ஜினும் நின்று போனது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து என்ஜினில் ஏற்பட்ட சிறியகோளாறு சீராகி மீண்டும் ரயில்நிலையத்திற்குள் வந்து பயணிகள் இறங்கியபின் அரைமணிநேரம் தாமதத்துடன் மன்னார்குடி புறப்பட்டுச் சென்றது. அதன்பின்னர் ரயில்வேகேட் திறக்கப்பட்டு நெடுஞ்சாலை வாகனங்கள் சுமார் 45 நிமிடம் தாமதத்துடன் புறப்பட்டுச் சென்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT