முகப்பு
திருவாரூர்

மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

திருவாரூரில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருவாரூரில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் மாவட்டம் உள்ளிக்கோட்டை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஹேமசந்த் காந்தி தலைமை வகித்து, தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும், அதற்கு தன்னாா்வலா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா்.

உள்ளிக்கோட்டை மருத்துவ அலுவலா்கள் பங்கேற்று, மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொண்டனா். இதில், அமைப்பின் சோ்மன் ஆா்.எஸ். ராஜ்குமாா், செயலாளா் ஜே. வரதராஜன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், மாவட்ட இளையோா் ரெட் கிராஸ் அமைப்பாளா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.