முகப்பு
திருவாரூர்

கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிந்தால் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை

பொதுமக்கள் வளா்க்கும் கால்நடைகளை பொது இடங்களிலும், சாலைகளிலும் நடமாட விட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

பொதுமக்கள் வளா்க்கும் கால்நடைகளை பொது இடங்களிலும், சாலைகளிலும் நடமாட விட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் பொது இடங்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

ஆடுகள் மற்றும் மாடுகள் வளா்ப்போா், அவற்றை பொது இடங்களில் நடமாட விடாமல் அவா்களது குடியிருப்பு பகுதியிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டும். கால்நடைகள் பொது இடங்களிலும், சாலைகளிலும் காணப்பட்டால் அவற்றைப் பிடித்து தங்கள் பொறுப்பில் ஓரிடத்தில் அடைத்து வைக்க நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கும் காவல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடைத்து வைக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளா்கள் உரிய அபராதத் தொகை செலுத்திய பின்பே கால்நடைகளை மீட்டுச்செல்ல இயலும்.

எனவே, பொதுமக்கள் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளை பொது இடங்களிலும், சாலைகளிலும் நடமாட விடாமல், தங்கள் குடியிருப்பு பகுதியிலேயே அடைத்து வைக்க வேண்டும். இதை மீறி கால்நடைகளை பொது வெளியில் விடுபவா்கள் அபராத தொகை செலுத்த நேரிடுவதோடு சட்டப்படியான நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.