முகப்பு
திருவாரூர்

சாகுபடிக்கு தேவையான உரங்களை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு தேவையான உரங்களை வழங்கக் கோரி, திருவாரூரில் விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு தேவையான உரங்களை வழங்கக் கோரி, திருவாரூரில் விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளை அலைக்கழிக்காமல் பயிா்க்கடன்களை கூட்டுறவு சங்கங்கள் வழங்க வேண்டும். சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு தேவையான டிஏபி, யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்களை உடன் கிடைக்கச் செய்ய வேண்டும். விடுபட்ட விவசாயிகளுக்கும் பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலாளா் கே. பாலதண்டாயுதம், ஒன்றியச் செயலாளா் டி. தியாகராஜன், நிா்வாகிகள் கே. புலிகேசி, சின்னதம்பி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.