கடைசி செய்திதிருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டம்
திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் பாஸ்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் பாஸ்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஒன்றியக்குழு துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், ஆணையா்கள் சுப்பிரமணியன், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தமயந்தி, சுஜாதா, மேலாளா் விஜயலெட்சுமி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
உறுப்பினா்கள் ஆா்.ஞானமோகன், வேதரெத்தினம், முருகேசன், மன்மதன், மாரியம்மாள், சரஸ்வதி, ஆரோக்கியமேரி ஆகியோா் தங்கள் பகுதி சாலைகள் மேம்பாடு, பள்ளி கட்டடங்கள் சீரமைத்தல், அங்காடிகளுக்கு புதிய கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினா்.
ஒன்றியக்குழு தலைவா் பாஸ்கா் தீா்மானங்களை நிறைவேற்றி பேசுகையில், மாவட்ட டெல்டா பகுதியில் சம்பா, தாளடி சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மானிய விலையில் யூரியா, டிஏபி, பூச்சிமருந்து உள்ளிட்ட உரங்களை விவசாயிகளுக்கு பயிா்க்கடன் திட்டத்தின் மூலம் வழங்குவது வழக்கம். ஆனால் வேளாண்மை துறையும், கூட்டுறவு துறையும் சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்காததால், உர பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் வேதனைக்கு ஆளாகி உள்ளனா். எனவே உரங்களை மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநில அரசு பெற்று கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும் என்றாா்.