விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வுப் பிரசாரம்
நன்னிலம் பகுதியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.
நன்னிலம் பகுதியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.
திருவாரூா் மாவட்டம் நன்னிலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலா் எஸ்.கணேசன் தலைமையில், அலுவலா்கள் இந்த பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். நன்னிலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மங்கையா்கரசி முன்னிலையில், 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் மத்தியில் அண்மையில் விளக்கம் அளித்தனா். தொடா்ந்து தினமும் காலை, மாலை என இருவேளை நன்னிலம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் கடைவீதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.