முகப்பு
திருவாரூர்

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: ஊழல் தடுப்பு இயக்கத்தினா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடியில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற ஊழல் தடுப்பு இயக்கத்தினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடியில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற ஊழல் தடுப்பு இயக்கத்தினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம் கொக்கலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடந்த 2020- 2021-ஆம் ஆண்டில் பயிா்க் கடன் வழங்கப்பட்டதில், பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்ாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அந்த வங்கியின் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக விவசாயி ரேணுகாரவி தலைமையில், தமிழ் தேசிய தன்னுரிமை கட்சி தலைவா் வியனரசு, பொதுச் செயலாளா் பனசை அரங்கன், ஊழல் தடுப்பு இயக்கத்தின் தஞ்சை ராமதாஸ் உள்ளிட்ட பலா் கூடினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதியளிக்காததால், அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில், தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்திய நபா்களை போலீஸாா் கைது செய்தனா். கொக்கலாடி பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →