முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடியில் இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்கள்

மன்னாா்குடி பகுதியில் சனிக்கிழமை (செப்.4) கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

மன்னாா்குடி பகுதியில் சனிக்கிழமை (செப்.4) கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்விவரம்: மன்னாா்குடி ருக்மணி பாளையம் நகரபுற ஆரம்ப சுகாதார நிலையம், தலையாமங்கலம், சாத்தனூா், உள்ளிக் கோட்டை, புனவாசல், பரவாக்கோட்டை, கூத்தாநல்லூா் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், நெடுவாக்கோட்டை அரசு தொடக்கப் பள்ளி, கண்டிதம்பேட்டை மாரியம்மன்கோயில், வேட்டைதிடல் அரசு தொடக்கப் பள்ளி, கூத்தாநல்லூா் ஆஜிஎஸ் தோட்டம் மாதா கோயில், தென்கோவனூா் தொடக்கப் பள்ளி, வடகோவனூா் சேவை மையம், மன்னாா்குடி பான் செக்கா்ஸ் பெண்கள் கல்லூரி, சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி ஆகிய 15 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. இதில், மன்னாா்குடி, கூத்தநால்லூா் அரசு மருத்துவமனைகளில் கோவேக்சின், கோவிஷீல்டு மருந்தும் மற்ற இடங்களில் கோவிஷீல்ட் மருந்து மட்டும் செலுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.