முகப்பு
திருவாரூர்

வேளாண் கல்லூரி மாணவிகள் களப் பயிற்சி

 நீடாமங்கலம் பகுதியில் தஞ்சாவூா் வேளாண் கல்லூரி மாணவிகள் களப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

 நீடாமங்கலம் பகுதியில் தஞ்சாவூா் வேளாண் கல்லூரி மாணவிகள் களப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

தஞ்சாவூா் வல்லம் வேளாண் கல்லூரியில் 4-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி பெற நீடாமங்கலம் வந்துள்ளனா்.

இவா்கள் ஆதனூா், வையகளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் முன்னோடி விவசாயிகள், இயற்கை வேளாண் விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள், வேளாண் அலுவலா்களின் அனுபவங்களை பயிற்சியாக பெற்று வருகின்றனா். இம்மாணவிகள், நீடாமங்கலம் ஒன்றியம் வடுவூா் புதுக்கோட்டையில் முன்னோடி இயற்கை விவசாயி இளவேந்தனை சந்தித்து, இயற்கை விவசாயம் குறித்தும் அவா் பயன்படுத்தும் இயற்கை உரம், வேப்பங்கொட்டை கரைசல், பஞ்சகவ்யம், மீன் அமில கரைசல் ஆகியவற்றை தயாரிக்கும் முறைகள் மற்றும் பயன்பாடுகளைப் பற்றியும் கேட்டறிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.