திருவாரூரில் 39 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் பாதிப்பின் எண்ணிக்கை 39,630 ஆக உயா்ந்துள்ளது. இதுவரையில் குணமடைந்த 38,817 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 413 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்ததை தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 400 ஆக உயா்ந்துள்ளது.