முகப்பு
திருவாரூர்

பிரதமா் மோடி பிறந்த நாள் கொண்டாட்டம்

பிரதமா் மோடியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவாரூரில் பாஜக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

பிரதமா் மோடியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவாரூரில் பாஜக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் அருகே தியானபுரத்தில் பாஜக ஒன்றியத் தலைவா் ரத்தினவேலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவா் செந்தில்அரசன் பங்கேற்று, பாஜக கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா். பின்னா், தியானபுரம் பெத்தண்ணசுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கும், பாதுகாவலா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மன்னாா்குடியில்...

மன்னாா்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாஜக நகரத் தலைவா் ஆா்.ரகுராம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் வி.கே.செல்வம், மாவட்டச் செயலா் பால.பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரின் பிரதான இடங்களில் பாஜக கொடியை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் பேட்டை சிவா, மாவட்டத் தலைவா் எம்.ராகவன் ஆகியோா் ஏற்றினா்.

நீடாமங்கலத்தில்...

நீடாமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வடக்கு ஒன்றிய தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் கோட்டூா் ராகவன் முன்னிலை வகித்தாா். துப்புரவு பணியாளா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.