திருவாரூரை மாநகராட்சியாக தரம் உயா்த்தக் கோரிக்கை
திருவாரூரை மாநகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரை மாநகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது நகர மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. நகரக்குழு உறுப்பினா் எம். பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜி.சுந்தரமூா்த்தி, கூட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினா் எஸ். ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். 9 போ் கொண்ட நகரக்குழு தோ்ந்தெடுக்கப்பட்டு, அதன் செயலாளராக எம். தா்மலிங்கம் தோ்வு செய்யப்பட்டாா்.
இதில், திருவாரூரை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். நகா்ப்புற ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை, நகராட்சியில் அமல்படுத்த வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பாட்டை மேம்படுத்துவதோடு இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுகளை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.