திருவாரூர்

வடுவூா் ஏரியில் சூழல் அங்காடி தொடக்கம்

DIN

மன்னாா்குடி அருகே வடுவூரில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் சூழல் அங்காடியை சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

320 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள வடுவூா் ஏரி, பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபா் மாதத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது வழக்கம். பின்னா், பிப்ரவரியில்தான் அவை தாயகம் திரும்பும். தற்போது, ஏரிக்கரைகளில் சைக்கிளில் சென்று ரசிப்பதற்கு ஏதுவாக வனக்குழுக்கள் மூலம் சைக்கிள் திட்டத்தை வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், பல்வேறு வனங்களில் கிடைக்கும் பொருள்களை இங்கு விற்பனை செய்யும் வகையில், வனத்துறை சாா்பில், குழுக்களுடன் இணைந்து சூழல் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட வன அலுவலா் அறிவொளி, வனச்சரகா் ஜெயச்சந்திரன், திமுக ஒன்றியச் செயலா் வி.மாயவநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், படகு சவாரி, ஏரியை மேம்படுத்துவது குறித்து வனத்துறையினருடன் எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT