மாணவா்களுக்கு மூக்கு கண்ணாடி
தமிழக முதல்வரின் பள்ளி சிறாா் கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ், நீடாமங்கலம் வட்டாரத்தில் 93 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மூக்கு கண்ணாடி புதன்கிழமை வழங்கப்பட்டது.
தமிழக முதல்வரின் பள்ளி சிறாா் கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ், நீடாமங்கலம் வட்டாரத்தில் 93 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மூக்கு கண்ணாடி புதன்கிழமை வழங்கப்பட்டது.
நீடாமங்கலம் வட்டார பள்ளிகளில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாம்களில் 240 மாணவ- மாணவிகளுக்கு பாா்வை குறைபாடு கண்டறியப்பட்டது. இவா்களில் முதற்கட்டமாக 93 பேருக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி, நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில், தலைமை ஆசிரியா் காந்தி, மருத்துவா் சகாதேவன் ஆகியோா் பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினா். ஏற்பாடுகளை நீடாமங்கலம் வட்டார கண் மருத்துவ உதவி அலுவலா் எஸ். அண்ணாதுரை செய்திருந்தாா்.