கூட்டுறவுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து
திருவாரூா் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக ஆள் சோ்ப்பு நிலையத்தின் தலைவரும், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளருமான கே.
திருவாரூா் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக ஆள் சோ்ப்பு நிலையத்தின் தலைவரும், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளருமான கே. சித்ரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் நியாயவிலைக் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப 2020-ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, 92 விற்பனையாளா்கள், 10 கட்டுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு 2020-ஆம் ஆண்டு டிசம்பா்14 முதல் 24-ஆம் தேதி வரை நோ்முகத் தோ்வு நடைபெற்றது.
இந்நிலையில், 2021 ஆகஸ்ட் 25-இல் நடந்த கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின்போது, துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் பதிவாளா் கடிதத்தை செயல்படுத்தும் விதமாக, 2020- இல் திருவாரூா் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையம் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளாா்.