முகப்பு
திருவாரூர்

ஏப்.29-இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

திருவாரூா் அருகே வண்டாம்பாளையில் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

திருவாரூா் அருகே வண்டாம்பாளையில் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் 2021-22-ஆம் ஆண்டுக்கான தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் திருவாரூா் வண்டாம்பாளையில் உள்ள தமிழ்நாடு தனியாா் தொழில் பயிற்சி நிலையத்தில் ஏப்.29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

எனவே, இந்த முகாமில் தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு நேரில் அல்லது 04365-250126 என்ற தொலைபேசி எண்ணில் நாகை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக (அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகம்) உதவி இயக்குநரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.