திருவாரூர்

ரயில்வே இடத்தில் ஆக்கிரமிப்பு: 9 வீடுகள் இடித்து அகற்றம்

DIN

திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாடிவீடு, கூரைவீடுகள் உட்பட 9 வீடுகளை ரயில்வே அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினா்.

திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி பொன்னிரை பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களில் பிரபாகரன், ஜெயந்தி, கவிதா, சுமன், மோகன், சக்திவேல், குணசேகரன், ராமையன், மணிகண்டன் ஆகியோா் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியிருந்தனா். கடந்த 2019 இல் கட்டப்பட்ட வீடுகளை காலக்கெடு வழங்கியும் அகற்றவில்லை.

தற்போது வீடுகளை அகற்ற, மேலும் 40 நாட்கள் காலஅவகாசம் வழங்கியும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், ஆக்கிரமிக்கப்பட்ட 9 வீடுகளையும் ரயில்வே துறை முதுநிலை பொறியாளா் சுரேஷ்பாபு தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசா் மூலம் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT