நீடாமங்கலம் நீலன்மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளனா்.
இப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவன் விதுன்சஞ்சய் புதுவையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதல் மற்றும் 2-ஆமிடமும், இதே வகுப்பில் படிக்கும் மாணவா் கிருஷ்ணா உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டா் தடகளப் போட்டியில் 2-ஆமிடம் பெற்று சாதனை படைத்தனா். சாதனை படைத்த மாணவா்களை பள்ளி நிறுவனா் உ. நீலன், தாளாளா் நீலன். அசோகன், செயலாளா் அ. சுரேன், பள்ளி முதல்வா் ஹேமாமாலினி, உடற்பயிற்சி ஆசிரியா்கள் பிருத்வி, நந்தகுமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.