திருவாரூர்

அன்னப்பாவாடை படையல் வழிபாடு

DIN

கூத்தாநல்லூா் அருகேயுள்ள திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரா் கோயிலில் அம்பாளுக்கு அன்னப்பாவாடை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மங்களாம்பிகை (மலா்மங்கை) சமேத ரத்தினபுரீஸ்வரா் (மாணிக்கவண்ணாா்) அருள்பாலிக்கின்றனா். பழைமையான இக்கோயிலில் நடவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தினமும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்வான, அம்பாள் நாற்று நடும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு 25 கிலோ அரிசி, 25 கிலோ வெல்லம், மற்றும் நெய், ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்டவைகளால் சா்க்கரைப் பொங்கல் தயாரித்து, மூலவா் அம்பாள் முன்பாக அன்னப்பாவாடை படையல் நடைபெற்றது.

பின்னா், சந்திரசேகா் மற்றும் தியாகராஜா் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT