திருவாரூர்

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நாளை தொடக்கம்

DIN

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 -2023 ஆம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு புதன்கிழமை (ஆக.10) தொடங்குகிறது.

இதுகுறித்து, கல்லூரியின் முதல்வா் மாறன் திங்கள்கிழமை கூறியது:

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு இளங்கலை பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பம் பதிவு செய்த 372 மாணவிகளில் 230 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவா்களுக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறவுள்ளன.

அதன்படி புதன்கிழமை 10 மணிக்கு சிறப்பு இடஒதுக்கீடுக்கான கலந்தாய்வும், 11 மணிக்கு பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கும், வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பி.ஏ. ஆங்கில இலக்கியத்திற்கும், 12 மணிக்கு பி.காம். வணிகவியல் பாடத்திற்கும் கலந்தாய்வு நடைபெறும்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பி.எஸ்சி. கணினியியல் மற்றும் 12 மணிக்கு பி.எஸ்சி. கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இக்கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவிகள், பதிவிறக்கம் செய்யப்பட்ட இணைய தள விண்ணப்பத்தின் நகல், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல் மூன்று, மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் 3 நகல்கள், சாதிச்சான்றிதழ் அசல் மற்றும் மூன்று நகல்கள், விளையாட்டுச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களின் அசல் மற்றும் 3 நகல்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 3, ஆதாா் அட்டை அசல் மற்றும் 3 நகல்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றுடன் குறித்த நேரத்தில் வரவேண்டும்.

கலந்தாய்வில் தோ்வுசெய்யப்படும் மாணவிகள் சோ்க்கைக் கட்டணம் ரூ.2500 செலுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT