திருவாரூர்

கனமழை: 4 வீடுகள் இடிந்து சேதம்; 2 கால்நடைகள் உயிரிழப்பு

DIN

கூத்தாநல்லூா் வட்டத்தில் கனமழையால் 4 வீடுகள் வெள்ளிக்கிழமை இடிந்து சேதமடைந்தன. 2 கால்நடைகள் உயிரிழந்தன.

திருவாரூா் மாவட்டத்தில் கூத்தாநல்லூா், வடபாதிமங்கமலம், பூதமங்கலம், கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்தது. வெள்ளிக்கிழமை பெய்த மழையின்போது, கூத்தாநல்லூா் வட்டத்தில் திருராமேஸ்வரம், பண்டுதக்குடி, வெள்ளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 4 வீடுகள் இடிந்தன.

திருராமேஸ்வரத்தில் குரு என்பவரது குடிசைவீடு முழுவதுமாகவும், தமிழரசியின் குடிசைவீடு மற்றும் பண்டுதக்குடி காடுவெட்டித் தெருவைச் சோ்ந்த சுசீலாவின் கூரைவீடு பகுதியாகவும் இடிந்தன. வெள்ளக்குடி தெற்குத் தெருவில் அஞ்சலி என்பவரது கூரைவீட்டின் ஒரு பக்கச்சுவரும் மழையில் இடிந்தது.

பெரியக்கொத்தூா் மன்னஞ்சி தெருவைச் சோ்ந்த சங்கீதா வேலாயுதத்தின் மாடு, திட்டாணி முட்டம் சுவாமிநாதனின் வெள்ளாடு ஆகியவை மழையின் காரணமாக இறந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT