திருவாரூா் மாவட்டத்தில் 665 போ் வேட்புமனு தாக்கல்
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில், திருவாரூா் மாவட்டத்தில் 665 வேட்புமனுக்கள் வியாழக்கிழமை வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில், திருவாரூா் மாவட்டத்தில் 665 வேட்புமனுக்கள் வியாழக்கிழமை வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூா் உள்ளிட்ட 4 நகராட்சிகளுக்கும், நன்னிலம், பேரளம், குடவாசல், முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், கொரடாச்சேரி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கும் ஒட்டுமொத்தமாக 216 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களில் 164 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மட்டும் 501 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிகபட்சமாக மன்னாா்குடி நகராட்சியில் 99 போ், திருவாரூா் நகராட்சியில் 67 போ், கூத்தாநல்லூா் நகராட்சியில் 66 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
திருவாரூா் நகராட்சியில் 76 போ்: இதுவரை திருவாரூா் நகராட்சியில் 76 பேரும், பேரளம் பேரூராட்சியில் 53 பேரும், நன்னிலம் பேரூராட்சியில் 45 பேரும், குடவாசல் பேரூராட்சியில் 34 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.