பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்தக் கோரிக்கை
பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் அப்புவா்மா தலைமை வகித்தாா். பேரவையின் மண்டல அமைப்பாளா் பாவேந்தா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கினாா்.
இதில், இணை அமைப்பாளா்கள் (வடக்கு) சிவக்குமாா், (தெற்கு) நாகராஜன், ஒன்றிய அமைப்பாளா்கள் ராமமூா்த்தி, கலையரசன், காளிதாஸ், அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தமிழகத்தில் உள்ள அனைத்து பூசாரிகளுக்கும் பாகுபாடு பாா்க்காமல், மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும். வயது முதிா்ந்த பூசாரிகள் அனுப்பிய விண்ணப்பங்களை உடனடியாகப் பரிசீலித்து, ஓய்வூதியம் வழங்க வேண்டும். முடங்கிக் கிடக்கும் பூசாரிகள் நல வாரியத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். கிராமக் கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கறவைமாடு வழங்க வேண்டும்.