முகப்பு
திருவாரூர்

தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்

 மத்திய பாஜக அரசை கண்டித்து, திருவாரூா் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

 மத்திய பாஜக அரசை கண்டித்து, திருவாரூா் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் முகம்மது மிஸ்கீன் தலைமைவகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் அசாருதீன், மாவட்ட துணைச் செயலாளா்கள், முபாரக், அப்துல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் யாசா் அரபாத், மாவட்ட துணைச் செயலாளா் ஹாஜா மைதீன், மாவட்ட தொண்டரணி வாசிம் ஆகியோா் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

மாநில மேலாண்மை குழு உறுப்பினா் இ. முஹம்மது பேசுகையில், ஹிஜாப் அணிவது முஸ்லிம் பெண்களின் உரிமை, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்றாா். மாவட்ட பொருளாளா் ஹாஜாமைதீன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →