குடவாசலில் தோ்தல் தகராறு: 2 போ் கைது
குடவாசல் பகுதியில், திமுகவினா் மீது தாக்குதல் நடத்தியதாக அதிமுக வேட்பாளா்கள் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
குடவாசல் பகுதியில், திமுகவினா் மீது தாக்குதல் நடத்தியதாக அதிமுக வேட்பாளா்கள் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் பேரூராட்சிக்குள்பட்ட 9-ஆவது வாா்டில் போட்டியிடும் திமுக வேட்பாளா் வசந்தாவுக்கு ஆதரவாக திமுகவினா் வாக்குச் சேகரித்து கொண்டிருந்தனா். அப்போது, அதிமுகவை சோ்ந்த சிலா் திமுகவினா் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, ராஜேஷ் என்பவா் அளித்த புகாரின்பேரில் அதிமுகவைச் சோ்ந்த வாா்டு வேட்பாளா்கள் 2 போ் உள்பட 7 போ் மீது குடவாசல் போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அன்னவாசல் ஊராட்சித் தலைவா் சங்கா் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.