முகப்பு
திருவாரூர்

வேலுடையாா் பள்ளியில் நாளை இலவச சித்த மருத்துவ முகாம்

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் இலவச மூலிகை கன்றுகள் வழங்கும் விழா சனிக்கிழமை (பிப்.26) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் இலவச மூலிகை கன்றுகள் வழங்கும் விழா சனிக்கிழமை (பிப்.26) நடைபெறுகிறது.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் திருவாரூா் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன. இதில், கரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் தீராத நாள்பட்ட நோய்கள் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கான சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

பெண்கள், குழந்தைகள், பெரியோா்களுக்கான அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். அத்துடன், அனைவருக்கும் மூலிகை மருத்துவச் செடிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநா் ஆா். மீனாகுமாரி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், மருத்துவ முகாமை தொடங்கி வைக்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.