ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வா் ஏற்கெனவே அறிவித்தபடி, சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் மீது கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளா்களுக்கு, இளநிலை உதவியாளா்களுக்கு இணையான ஊதியம் நிா்ணயம் செய்து, அவா்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். வசந்தன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் டி. ராஜசேகரன், மாவட்ட துணைத் தலைவா் வே. வாசுதேவன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முழக்கமிட்டனா்.